Categories
தேசிய செய்திகள்

ரூ.1500 முதலீடு செய்தால் போதும்…. ஒவ்வொரு மாதமும் ரூ.5,100 வரை வருமானம்…. அசத்தலான சேமிப்பு திட்டம்….!!!!

ஒவ்வொரு மாதமும் 5,100 வரை சம்பாதிக்க கூடிய வகையில் ஒரு சிறந்த சேமிப்பு திட்டத்தை தபால்துறை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் தபால் நிலையத்தால் செயல்படுத்தப்படுகிறது. மிக சிறந்த திட்டம் இது. இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் 5,100 ரூபாய் வருமானத்தை சம்பாதிக்க முடியும். இது பயனாளர்களுக்கு உத்திரவாதமான லாபம் தரும் சிறந்த திட்டம். நீங்கள் குறைந்த அளவில் முதலீடு செய்வதற்கு விரும்பினால், அதற்கு இதுவே சிறந்த திட்டம். இந்தத் திட்டத்தின்படி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச தொகை 1,500 ரூபாய் டெபாசிட் செய்யலாம்.

இதனையடுத்து மாத வருமான திட்டத்தில் இணைய வாடிக்கையாளர்கள் தபால் நிலையத்திற்கு நேரடியாக சென்று ஒரு கணக்கை திறந்து கொள்ள வேண்டும். அதன்படி இந்த திட்டத்தின் முதிர்வு காலம் வாடிக்கையாளர்களின் தேவையைப் பொறுத்து தீர்மானம் செய்யப்படும். உங்களின் முதிர்வு காலத்திற்கு முன்னரே இந்த பணத்தை நீங்கள் எடுக்க விரும்பினால் கணக்கில் ஒரு வருடம் முடிந்ததும் உங்களுக்கு அந்த வசதி கிடைக்கும்.

இந்தத் திட்டத்தின் கீழ் 6.6 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நபர் தனியாகவோ அல்லது கூட்டு கணக்கை திறப்பதன் மூலம் இதில் முதலீடு செய்யலாம். குறிப்பாக வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 4.5 லட்சம் முதலீடு செய்யலாம். மேலும் கணவன் மனைவி இருவரும் கூட்டு கணக்கின் கீழ் இந்த திட்டத்தில் 9 லட்சம் முதலீடு செய்தால் அவர்கள் ஆண்டுக்கு 6.6 சதவீதம் என்ற விகிதத்தில் ரூ.61,200 சம்பாதிக்கலாம். இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் தபால் துறையில் கணக்கு தொடங்கி இந்த திட்டத்தில் பயன் அடையுங்கள்.

Categories

Tech |