புதுச்சேரியில் தற்காலிக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் 7 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல மாநில அரசுகளும் பொதுமக்களுக்கு பல பரிசுகள் மற்றும் அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் நிலையில், புதுச்சேரி முதல்வர் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Categories