தமிழக ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் மளிகைப் பொருட்களும், இலவச அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நிதி உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் உலக உணவு தினமான அக்டோபர் 16ஆம் தேதி பரிசு வழங்க அறிவிப்பை தமிழக அரசு ஜூலையில் வெளியிட்டது. அதன்படி மாநில அளவில் சிறப்பாக பணியாற்றும் ரேஷன் கடை விற்பனையாளர் களுக்கு முதல் பரிசாக 15,000, இரண்டாம் பரிசு 10,000, மூன்றாம் பரிசு 5000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி எடையாளர்களுக்கு முதல் பரிசு 10,000, இரண்டாம் பரிசு 6000, மூன்றாம் பரிசு 4000 வழங்கப்படுகிறது. மேலும் மாவட்ட அளவில் விற்பனையாளர்களுக்கு முதல் பரிசு 4000, இரண்டாம் பரிசு 3000, எடையளர்களுக்கு முதல் பரிசு 3000, இரண்டாம் பரிசு 2000 வழங்கப்பட உள்ளது.இதற்கு வருடம்தோறும் 6.50 லட்சம் ரூபாய் செலவிடப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து அக்குழு ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து சிறந்த ஊழியர்களை தேர்வு செய்து உணவு துறைக்கு பட்டியல் அனுப்பியுள்ளது. அவர்களுக்கு விரைவில் முதல்வர் ஸ்டாலின் பரிசுகளை வழங்க உள்ளார்.