Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரூ.15,00,00,000 கொடுக்கணும்…! தொல்லை பண்ணுறாங்க.. வியாபாரி எடுத்த சோக முடிவு …!!

15 கோடி ரூபாய் கடன் தொல்லையால் தாராபுரம் நகை வியாபாரி தனது குடும்பத்தினரை ஐந்து பேருடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரிய கடை வீதியில் வசிக்கும் வெங்கட்ராமன் என்பவரின் மகன் பலராமன். தாராபுரத்தில் நகைக்கடை, நிதி நிறுவனம் மற்றும் தானிய மண்டி நடத்தி வருகிறார். நகைக்கடையில் 15 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட தனது நண்பர்கள் பலரிடம் பலராமன் கடன் பெற்றுள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டதுடன், நகை கடை முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் கடந்த ஒரு வார காலமாக பலராமன் தலைமறைவாக இருந்துள்ளார்.

இந்நிலையில் திருச்சியில் லால்குடியில் சந்தைபேட்டை பகுதியில் உள்ள தனது மருமகள் வீட்டிற்கு வந்த பலராமன், பின்னர் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தனது மனைவி புஷ்பா, மகன் ஹரி, அவரது மனைவி திவ்யா, எட்டு வயது மகள் ராதா ஆகியோருடன் தங்கியுள்ளார். இரவு அனைவரும் விஷம் குடித்துள்ளனர். இந்த தகவல் அறிந்த கார் ஓட்டுனர் அனைவரையும் மீட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் அவர்கள் தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |