Categories
தேசிய செய்திகள்

ரூ.16 கோடி செலவு செய்து போடப்பட்ட ஊசி… இருந்தும் பலனளிக்கல…. கதறி அழுத பெற்றோர்கள்…!!!

16 கோடி செலவு செய்து ஊசி போடப்பட்ட புனேவை சேர்ந்த ஒரு வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த ஒரு வயது சிறுமி வேதிகா ஷிண்டே. இந்த சிறுமி தசைநார் சிதைவு என்ற அரியவகை நோயின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். அவர் நோயிலிருந்து மீண்டு வருவதற்கு 16 கோடி மதிப்பிலான ஒரு மருந்து செலுத்தப் பட வேண்டியிருந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் சமூக வலைதளங்களில் பொதுமக்களிடம் உதவி கேட்டனர். பொது மக்களும் ஏராளமானோர் இந்த சிறுமிக்கு உதவி செய்ததன் காரணமாக கடந்த ஜூன் மாதம் சிறுமிக்கு அந்த ஊசி செலுத்தப்பட்டது.

இதனால் சிறுமி நோய் பாதிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வர தொடங்கினார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தது. திடீரென்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட காரணத்தினால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 16 கோடி செலவு செய்து மருந்து செலுத்தப்பட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |