Categories
மாநில செய்திகள்

ரூ. 16 கோடி மதிப்பிலான ஊசி…. மித்ராவுக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது…!!!

நாமக்கல் மாவட்டம், காந்தி நகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், பிரியதர்ஷினி என்ற தம்பதியினரின் இரண்டு வயது குழந்தை மித்ரா. சில மாதங்களுக்கு முன்பாக இந்த குழந்தை நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தது. பின்னர் இந்த குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவரிடம் அழைத்து சென்றனர். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் முதுகு தண்டுவட சிகிச்சை நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நோயை குணப்படுத்த 16 கோடி செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த தொகையை எப்படி திரட்டுவது என்று திகைத்த பெற்றோர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் பலரும் உதவி கரம் நீட்டினார். மித்ராவின் நிலையை அறிந்த பல வங்கிகளும் நிதி வழங்குவதற்கு முன் வந்தனர். இப்படி 16 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. தற்போது இந்த சிறுமிக்கு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக ஊசி செலுத்தப்பட்டது. சமூக வலைத்தளங்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவிக்கு மித்ராவின் பெற்றோர்கள் மிகுந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |