அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொரோனா காலத்தில் ஏற்பட்டிருக்கும் இழப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது
உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி வருவதால் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் பல விமான நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்க தொடங்கின. இதிலிருந்து மீண்டு வர செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளையும் விமான நிறுவனங்கள் எடுத்தன. ஆனால் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீண்டு வந்ததால் பல நாடுகளில் உள்ள விமான நிறுவனங்கள் மொத்தமாக திவாலானது.
சில விமான நிறுவனங்களுக்கு அவர்கள் நாட்டில் நிதிஉதவி வழங்குவதால் ஊழியர்களின் வேலை பறி போகாமல் உறுதியாக இருக்கிறது. சில விமான நிறுவனங்கள் தங்கள் சேவையை தொடங்கியுள்ளது. ஆனாலும் இயல்பான விமானப் போக்குவரத்து இல்லாததால் பல நாடுகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. மிக பெரிய விமான நிறுவனமான அமெரிக்க ஏர்லைன்ஸ் கூட நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில் ஜூன் முதல் அக்டோபர் வரையிலான கணக்கு விவரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வருமானம் மூன்றாம் காலாண்டில் மட்டும் 73 சதவீதம் குறைந்துள்ளது அதாவது 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,76,83,12,80,000) நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அந்நிறுவனம் 20 ஆயிரம் ஊழியர்களுக்கு நீண்டகால விடுமுறை அல்லது விருப்ப ஓய்வு கொடுத்துள்ளது 19 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதற்கு முன்னதாக அமெரிக்க அரசு இந்த நிலையை சீர் செய்ய 5.5 மில்லியன் டாலர்களை அமெரிக்கன் யாருக்கு ஏர்லைன்ஸுக்கு கடனாக வழங்க அனுமதி அளித்தது.