சென்னை மயிலாப்பூர் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸுக்கு ரூ 2,10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவர் கடந்த 18. 08 2013 ஆம் ஆண்டு மயிலாப்பூரில் இயங்கி வரும் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸில் ஒரு உள்ளாடை வாங்கி உள்ளார். இந்த உள்ளாடை மதிப்பு 260. ஆனால் 278 ரூபாய் வசூல் செய்துள்ளது ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ். இதையடுத்து அவர் வீட்டுக்கு சென்றதற்குப் பின் கூடுதல் வசூல் செய்திருப்பதாக அந்த நிறுவனத்திடம் புகார் செய்துள்ளார். அந்த நிறுவனமும் அவருக்கு மீதி 18 ரூபாயை ஐசிஐசிஐ வங்கியில் காசோலை மூலமாக எடுத்து அனுப்பி இருக்கிறது.. இந்த பணத்தை நான் இதை தரமாட்டேன், இதேபோன்று பல நபர்களிடம் நீங்கள் ஏமாற்றி உள்ளீர்கள் எனக்கூறி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு என்பது கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இன்று திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் நீதிபதி சக்கரவர்த்தி தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், இதே போன்று நிறுவனம் பல நபர்களை ஏமாற்றியதாக புகார் வந்துள்ளது.. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிவப்பிரகாசத்திற்கு ரூ.5000 இழப்பீடாக வழங்க வேண்டும், அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு நுகர்வோர் நலநிதிக்கு 2 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும், அது மட்டும் இல்லாமல் 5 ஆயிரம் ரூபாய் அவருக்கு செலவு தொகையாக வழங்க வேண்டும், ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 10 ஆயிரத்தை செலுத்த வேண்டும் என்று அதிரடி உத்தரவை தற்போது திருவாரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் சக்கரவர்த்தி பிறப்பித்துள்ளார். இந்த தீர்ப்பு என்பது மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது