உத்தரப்பிரதேசம் அயோத்தில் ராமர் கோவில் கட்டுமான பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று கோவில் கட்டுவதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் பேசிய அறக்கட்டளையின் பொதுச்செயலர் சம்பத் ராய், “கோவில் வளாகத்தில் ராமாயண காலத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் முக்கிய ஹிந்து சமய ஜீயர்களின் சிலைகளை வைக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிபுணர்கள் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் ராமர் கோவில் கட்டுவதற்கு மட்டும் ரூ.1,800 கோடி செலவாகும் என அறக்கட்டளை மதிப்பிட்டுள்ளது. 2023 டிசம்பரில் கோவிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிடும். 2024 ஜனவரியில் மகர சங்கராந்தி பண்டிகையின் போது ராமர் கருவறையில் அமர்ந்து விடுவார்” என்று கூறினார்.