திருவையாற்றில் வாகன சோதனையில் 1லட்சத்தி 80ஆயிரம் பணம் பறக்கும் படையினர் கைப்பற்றினர் .
தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு பகுதியை அடுத்த நடுக்கடையில் ,பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தன. தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்த காரை சோதனை செய்தபோது, அதில் ரூபாய் ஒரு லட்சம் பணம் இருந்தது தெரிந்தது. விசாரணையில் காரை ஓட்டி வந்த நபர் திருத்துறைப்பூண்டி அகமுடையார் தெருவை சேர்ந்த 40 வயதுடைய டாக்டர் ஜீவா என்பது தெரியவந்தது .இவர் உரிய ஆவணம் இன்றி ஒரு லட்சம் ரூபாயை காரில் எடுத்துச் சென்றார்.
இதனால் பறக்கும் படை அதிகாரிகள் ,அவரிடம் இருந்து பணத்தை கைப்பற்றி, திருவையாறு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.இதேபோன்று கந்தர்வக்கோட்டையில் இருந்து செங்கிப்பட்டி யை வந்த லாரியை சோதனை செய்தபோது, ரூபாய் 80,000 கைப்பற்றப்பட்டது. பின் லாரி டிரைவர் சேலம் மாவட்ட,எடப்பாடியில் இருப்பாளி கிராமத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து என்று விசாரணை தெரிந்தது. இவர் உரிய ஆவணமின்றி பணத்தைக் கொண்டு வந்ததால் ,அந்தப் பணம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு ,சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்