Categories
சினிமா தமிழ் சினிமா

ரூ.2 கோடிக்கு வங்கி உத்திரவாதம்… சரத்குமார் விளக்கம்…!!!

காசோலை மோசடி வழக்கில் 2 கோடிக்கு வாங்கி உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக நடிகர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் மீதான செக் மோசடி வழக்கில் இருவருக்கும் 7 வழக்குகளில் தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் , விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடித்த இது என்ன மாயம் படம் தயாரிப்புக்காக ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒன்றரை கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.

இந்த பணத்தை 2015 மார்ச் மாதத்திற்குள் திருப்பி தருவதாக உறுதி அளித்திருந்தனர். ஆனால் உத்திரவாதத்தை மீறி பாம்பு சட்டை படத்தை வெளிவிட்டுள்ளதால் தங்களுக்கு தர வேண்டிய இரண்டரை கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்து தர உத்தரவிட கோரியும் அடமானமாக வைத்த சொத்துக்களை விற்க தடை விதிக்க கோரியும் ராடியன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பணத்தை திரும்பத்தர வேண்டும் என கூறியிருந்தது. இதையடுத்து ராடின்ஸ் நிறுவனத்திற்கு 7 காசோலைகளை சரத்குமாரும், ராதிகாவும் கொடுத்தனர். அதில், ஒரு காசோலை வங்கி கணக்கில் பணமில்லாததால் திரும்பியுள்ளது. இதையடுத்து சரத்குமார், ராதிகா மற்றும் பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ராடியன்ஸ் நிறுவனம் சார்பில் 7 கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிமன்றம் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.மொத்தம் 7 வழக்குகளில் சரத்குமார் மீதான ஐந்து வழக்குகளில் தலா ஓராண்டும், மீதமுள்ள இரண்டு வழக்குகளில் சரத்குமார் ,ராதிகா சரத்குமார் பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு தலா ஓராண்டும் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனையடுத்து காசோலை மோசடி வழக்கில் 2 கோடிக்கு வங்கி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என நடிகர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். வங்கி உத்திரவாதம் தவிர எனது இரண்டு சொத்துக்களும் உத்தரவாதமாக தரப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்வோம் என சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |