தீ விபத்து ஏற்பட்டதால் வீட்டில் இருந்து அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கர்பாளையம் கொளுஞ்சிக்காடு பகுதியில் ஈஸ்வரன்(64) என்பவர் வசித்து வருகிறார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் இரண்டு பவுன் தங்க நகை, மளிகை பொருட்கள், துணிகள், 2 லட்ச ரூபாய் பணம் ஆகியவை எரிந்து நாசம் ஆகிவிட்டது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீப்பிடித்து எரிந்த போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.