Categories
மாநில செய்திகள்

ரூ.2.5 லட்சம், ரூ.1.5 லட்சம், ரூ.1 லட்சம் பரிசு…. அதிமுக அதிரடி அறிவிப்பு…!!

தகவல் தொழிநுட்ப துறையில் சிறந்து விளங்கும் மூன்று பேருக்கு முதல் பரிசாக ரூபாய் 2.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், சென்னை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவின் வழிகாட்டுதலின்படி எதிர்பார்ப்புகளை மிஞ்சும் அளவிற்கு ஐடி பிரிவில் பணியாற்றும் தலைசிறந்த மூன்று நபர்கள் சேர்ந்து பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இவர்களுக்கு முதல் பரிசாக 2.5 லட்சமும் இரண்டாவது பரிசாக ரூ.1.5 லட்சமும், மூன்றாவது பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |