Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ 20செலவு செய்யுறான்…! வெறும் 10ரூபாய் கிடைக்கு… பால்டாயில் வாங்கிட்டு போறான்…. சீமான் வேதனை

நேற்று மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் சந்தை அருகில் சீமான் பரப்புரை செய்த போது, இன்றைக்கு விவசாயி தொடர்ச்சியாக வாழமுடியாமல் தற்கொலை செய்து கொண்டு வருவதை பார்க்கின்றோம். ஒரு சிகரெட் பிடிக்காமல் உங்களால் வாழ்ந்து விட முடியும். ஆனால் சிகரெட்டை உற்பத்தி செய்கிற முதலாளி, விக்கிற முதலாளி கோடீஸ்வரன். மது குடிக்காமல் வாழ்ந்து விட முடியும். அதை உற்பத்தி செய்றவன்,  விற்பவரும் மாபெரும் கோடீஸ்வரன்.

கார் இல்லாமல் வாழ்ந்து விட முடியும், காரை உற்பத்தி செய்வன் விற்பவன் மாபெரும் கோடீஸ்வரன். செல்போன் இல்லாமல் வாழ்ந்து விட முடியும். அதை உற்பத்தி செய்வன், விற்பவன் மாபெரும் கோடீஸ்வரன். பான்பராக்கு – புகையிலை போடாமல் வாழ முடியும். அதை உற்பத்தி செய்வன் பெரிய பணக்காரன், விற்பவன் பெரிய பணக்காரன். ஆனால் உணவு இல்லாமல் வாழவே முடியாது, அதை விளைவிப்பவன் ஏழையாக இருக்கிறான், வறுமையில் இருக்கிறான், கடனாளியாக இருக்கிறான், தற்கொலை செய்து சாகிறான்  என்றால் காரணம் என்ன ?

உலகில் எந்த பொருளையும் உற்பத்தி, செய்பவனே அதற்கான விலையை தீர்மானிக்கிறான். குண்டிசியானாலும் எந்த பொருளாக இருந்தாலும் இது இரண்டு ரூபாய், இது பத்து ரூபாய் என விலையை தீர்மானிக்கிறான். அதுதான் அதன் விலை. ஆனால் விளைய வைக்கின்ற விவசாயி அதற்கான விலையை தீர்மானிக்க முடியவில்லை. ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் செலவழித்து விளைய வைத்து சந்தைக்கு  எடுத்துட்டு வந்தால், வாங்குறவன் தீர்மானிக்கிறான், கிலோ பத்து ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறேன் என்கிறான்,

பாதி இழப்பு, திருப்பி எடுத்துட்டு போக முடியாது. பொருள் கெட்டு போய்விடும். அப்போது வந்த விலைக்கு கொடுத்துவிட்டு, அப்படியே மருந்து கடையில் பால்டாயில் வாங்கிட்டு போயிட்டு நிலத்தில் குடுத்துட்டு படுத்துவிடுகின்றார்,  இதுதான் நடக்கிறது. நாம விவசாயம் செத்துட்டாருனு தொலைக்காட்சியில பார்க்குறோம்,  செய்தி தாள்களில் பார்க்கிறோம். ஆனால் நாளை நாம் சோறு இல்லாமல்  சாகப் போகிறோம் என்கிற முன்னறிவிப்பு என்பதை தமிழ் இளம் தலைமுறையினர், என் அன்பு சொந்தங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே தான் உழவை மீட்போம், உலகை காப்போம், வெள்ளப் போகிறான் விவசாயி என்று முழக்கத்தை முன்வைத்து உங்கள் முன்னாள் உங்கள் பிள்ளைகள் வாங்கு சேகரித்து வருகின்றோம். மாறுவோம், மாற்றுவோம், மாற்றத்திற்கான நாள் ஏப்ரல் 6. என் அன்பிற்குரிய சொந்தங்கள் மறந்துவிடாமல்,  நன்றி உணர்ச்சியோடு…  மூன்று வேளை சோறு இடுகிற விவசாயிக்கு நன்றி உணர்ச்சியோடு அந்த வாக்கு எந்திரத்தில் விவசாயி நன்றி உணர்ச்சியோடு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என சீமான் வாக்கு சேகரித்தார்.

Categories

Tech |