இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது
இந்து சமய அறநிலையத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களின் சொத்துக்களை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னையில் கோவில்களின் சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்திருக்கும் நபர்களிடமிருந்து பல கோடி ருபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆதிகேசவ பாஷ்யக்கார திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ. 4 கோடி மதிப்பிலான கட்டிடம், அகத்தீஸ்வரம் கோவிலுக்கு சொந்தமான ரூ. 16 கோடி மதிப்புடைய 24 கடைகள் போன்றவைகள் மீட்கப்பட்டுள்ளது. இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு ரூபாய் 20 கோடியாக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.