தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானிய கோரிக்கை விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி இதில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதில், 11,12 ஆம் வகுப்பில் computer science பிரிவில் பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் ரூ.200 தனி கட்டணம் ரத்து செய்து கட்டணங்களுக்கான செலவை அரசே ஏற்கும் என அமைச்சர் மகேஸ் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 4.8 லட்சம் நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவில் கல்வி வழங்கிடும் வகையில் 9.83 கோடி மதிப்பீட்டில் எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
Categories