யூ.பி.ஐ வாயிலாக பணம் அனுப்புபவர்களுக்கு யூ.பி.ஐ லைட் என்ற அம்சத்தை என்பிசிஐ அமைப்பு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த யூ.பி.ஐ லைட் அம்சத்தின் வாயிலாக சிறிய அளவிலான பண பரிவர்த்தனைகளை செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது யூ.பி.ஐ சேவையை கொடுக்கும் அனைத்து நிறுவனங்களும் யூ.பி.ஐ லைட் தேர்வையும் வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த யூ.பி.ஐ லைட்டில் ஆன்லைன் வாலட் தரப்படும். பயனாளர்கள் வங்கி கணக்கில் இருந்து வாலட்டில் பணத்தை வைத்து கொண்டு சிறிய அளவிலான பரிவர்த்தனைகளை செய்யலாம். இதில் ரூபாய் 200 முதல் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளை செய்ய முடியும். தற்போது யூ.பி.ஐ சேவையை இணையம் இல்லாமலே செய்யும் வசதி அறிமுகமாகி உள்ள நிலையில், யூ.பி.ஐ லைட் சேவையை இணையத்தில் மட்டுமே செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.