நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பிரதமர் கிசான் யோஜனா திட்டம் மூலம் நிதியுதவி பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதை பெறுவதற்கு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும். 2 ஹெக்டேருக்குக் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் நான்கு மாத இடைவெளியில் 2000 ரூபாய் வழங்கப்படும். இந்த நிதியுதவி திட்டத்தை பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கி வைத்தார். 4 மாதத்திற்கு ஒருமுறை 2000 என்று வருடத்திற்கு 6000 விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். கிராம நிர்வாக அலுவலகங்களில் விவசாயிகள் தங்களது நில விவரம், வங்கிக்கணக்கு, ஆதார் எண்ணை சமர்ப்பித்து திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் வசதிகள், கட்டாயம் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இனைத்திருக்க வேண்டும். அப்படி இணைக்காவிட்டால் இந்த நிதியில் இருந்து பணம் கிடைக்காது. இந்நிலையில் இந்த திட்டத்தில் இதற்கு முன்னதாக 2 ஹெக்டேருக்கு குறைவான சாகுபடி நிலம் கொண்ட விவசாயிகளுக்கு மட்டுமே நிதி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நாட்டின் எந்த விவசாயியும் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.