Categories
தேசிய செய்திகள்

ரூ.2000 பணம் எப்போது தெரியுமா?…. அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பி எம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இறுதியாக கடந்த மே 30ஆம் தேதி 11 வது தவணை படம் வழங்கப்பட்ட நிலையில் 4 மாதங்களுக்கு ஒரு முறை பிரதமர் கிசான் தவணைத் தொகை 2000 ரூபாய் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் மிக விரைவில் பன்னிரண்டாவது தவணைத் தொகையும் விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் செலுத்தப்படும் என தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் 12வது தவணை 2000 ரூபாய் பணம் விவசாயிகள் வங்கி கணக்கில் நாளை செலுத்தப்படும் இடம் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் டோமர் அறிவித்துள்ளார். இதற்காக 16 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் மோடி நாளை வெளியிட உள்ளார். இதனால் சுமார் 12 கோடி விவசாயிகள் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |