நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.
12-வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். அதற்கான தகவல் சமீபத்தில் வெளியானது.அதாவது வருகின்ற நவம்பர் 30ம் தேதிக்குள் 12-வது தவணை பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் பி எம் கிசான் திட்ட பயனாளிகள் அனைவரும் www.pmkisan.gov.inஎன்ற இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரை பதிவிட்டு ஆதார் எண்ணை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்ய முடியாதவர்கள் அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு தங்கள் விரல் கைரேகையை பதிவு செய்து ஆதார் எண்ணெய் அப்டேட் செய்யலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது .இதனை செய்தவர்களுக்கு மட்டுமே பன்னிரண்டாவது தவணை தொகை வழங்கப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் தமிழக அரசின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.