மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது.
இதையடுத்து எட்டாவது தவணை செலுத்தி முடிக்கப்பட்ட நிலையில் ஒன்பதாவது தவணைப் பணம் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஒருசில விவசாயிகளுக்கு பணம் கிடைப்பதில்லை என்று புகார் எழுந்து வருகிறது. இதற்கு அவர்கள் வழங்கிய விவரங்கள் ஏதேனும் தவறாக இருந்தாலும் பணம் வராது. எனவே அவற்றை உடனே சரிபார்ப்பது நல்லது. அந்தவகையில் விவசாயியின் பெயர், வயது, பிரிவு ஆதார் எண் இணைப்பு ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்.
ஆதார் கார்டு இல்லாவிட்டால் டிரைவிங் லைசென்ஸ், ஓட்டர் ஐடி, நூறு நாள் வேலைத்திட்ட அட்டை ஆகியவை ஏற்கப்படும். வங்கியின் கணக்கு எண் மற்றும் ஐஎஃப்எஸ்சி கோட் ஆகியவை முக்கியமானதாகும். எனவே அதையும் சரி பார்க்க வேண்டும். செல்போன் நம்பர் ஆக்டிவாக இருக்க வேண்டும். ஒருவேளை முதலில் கொடுத்த செல்போன் நம்பரை மாற்றி இருந்தால் அதை தற்போது அப்டேட் செய்ய வேண்டும். அப்போதுதான் பணம் தொடர்பான விவரங்கள் பயனாளிகளுக்கு சரியாக வந்து சேரும்.