சரியான நேரத்தில் வேலையை செய்து முடிக்காத ஊழியர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது. பொதுவாக பல அரசு அலுவலகங்களில் ஏதேனும் ஒரு வேலைக்காக சென்றால், நீண்ட நாட்கள் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு பல காலமாக நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அரசு துறை சார்ந்து கடும் விமர்சனங்களையும் முன்வைக்கின்றன. இதனை மாற்ற வேண்டும் என்பதற்காக ஹரியானா அரசு ஒரு முடிவெடுத்துள்ளது. அதாவது அரியானா மாநிலத்தில் சேவை உரிமை ஆணையத்தின் தலைமை ஆணையர் டி.சி.குப்தா ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தங்களது வேலையை உரிய நேரத்தில் செய்யாத 250 அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசு சேவைக்கு குறிப்பிட்ட நேரம் நிர்ணயம் செய்யப்படும். அதற்குள் அந்த விஷயங்களை செய்து முடிக்க வேண்டும். அப்படி செய்யாத சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு உரிய நேரத்தில் வேலையை செய்து முடிக்க அரசு ஊழியர்களுக்கு 20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
இந்த தொகை அவர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும். இதேபோன்று மூன்று முறைக்கு மேல் அபராதம் விதிக்கும் நிலைக்கு தள்ளப்படும் அதிகாரிகள் பிறகு பணி நீக்கம் செய்யப்படுவார்கள். அதுமட்டுமின்றி காலதாமதமாக சேவை பெறும் நிலைக்கு தள்ளப்பட்ட பொதுமக்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.