தமிழகத்தில் அரசு கலை, கல்லூரிகளில் 2423 சுழற்சி-1 பாடங்களை நடத்தும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியம் 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணை வெளியாகியுள்ளது . அதன்படி 2020 – 21 ஆம் கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் சுழற்சி ஒன்று பாடப்பிரிவுகளை நடத்துவதற்காக 2423 கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் சம்பளம் 15 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகின்றது.
இது ஏப்ரல் 2020, ஜூன் 2020 முதல் அக்டோபர் 2020 வரை ஆறு மாதங்களுக்கு மற்றும் நவம்பர் 2020 முதல் மார்ச் 2021 வரை 5 மாதங்களுக்கு ஆக மொத்தம் 11 மாதங்கள் முறையே தொகுப்பூதிய அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டனர். இந்நிலையில் இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர தொகுப்பூதியம் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.