Categories
தேசிய செய்திகள்

ரூ.20000 பணம்….. வாட்ஸ் அப்பில் சிறுமியின் வீடியோ…. 3 சிறுவர்கள் செய்த செயல்…. பகீர் சம்பவம்….!!!!

ஒடிசா மாநிலத்தில் 12 வயது சிறுமியை 14,17 வயதுடைய மூன்று சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவாக எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோவை காட்டி சிறுமியிடம் 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய நிலையில் பணம் தராவிட்டால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம் எனவும் சிறுமியிடம் கூறியுள்ளனர். இருந்தாலும் அந்த சிறுமி பணம் தரவில்லை.இதனால் அந்த சிறுவர்கள் சிறுமியின் வீடியோவை வாட்ஸ் அப் குரூப்பில் போட்டு உள்ளனர்.

அந்த வீடியோவை சிறுமியின் உறவினர் ஒருவரும் பார்த்த நிலையில் உடனே அதிர்ச்சி அடைந்து அவர் சிறுமியின் பெற்றோரிடம் விவரத்தை கூறியுள்ளார்.அதன் பிறகு சிறுமியிடம் விசாரித்த போது அவர் நடந்ததை கூறிய நிலையில் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதனைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று சிறுவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |