Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ. 2,00,000 கோடி சொத்து பட்டியல்….! ஊழல் புகாரளிக்க “டோல்ப்ரீ” எண்…. பரபரப்பாக்கிய அண்ணாமலை…!!!!

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் தன்னுடைய உடம்பில் இருக்கும் என்று கூறினார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்ணாமலை வாட்ச் பற்றிய விவகாரம் தான் தற்போது அரசியல் வட்டாரத்தில்  பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்நிலையில்  என்னிடம் 13 தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் ரூ. 2,00,000 கோடி சொத்து பட்டியல் விரைவில் வெளியிடப்படும். ‘டோல்ப்ரீ” எண் அறிவிக்க உள்ளோம். மக்களே நேரடியாக தி.மு.க.,வினர் அபகரித்த நிலங்கள், சொத்து, ஊழல்கள் குறித்து புகார் சொல்லலாம். நாங்கள் கேட்கும் கேள்வி தி.மு.க.,வுக்கு முடிவுரை எழுதும், என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |