திமுக ஆட்சி காலத்தில் டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் முக.ஸ்டாலின் கட்சியின் மூத்த தலைவர், நிர்வாகிகளுடன் இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து முதல்வர் உட்பட அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் முக. ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழகத்தில் தொழில் தொடங்க விதிகள் எளிமையாக பட்டுள்ளன. தொழில் முதல்வரை ரத்தினக் கம்பளம் கொண்டு வரவேற்போம். ஸ்டாலின் கூறுவது பொய் குற்றச்சாட்டு. பொங்கல் பரிசு வழங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டை கூறுகிறார். டெண்டர் அனைத்தும் மின்னணு முறையில் வழங்கப்படுகிறது. அதில் முறைகேடுக்கு வழி இல்லை. திமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட டெண்டர்களில் ஊழல் நடைபெற்றுள்ளது.
கொரோனா சூழலில் வாழ்வாதார பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. நான் முதல்வர் ஆனதிலிருந்து ஊழல் குற்றச்சாட்டை மு க ஸ்டாலின் கூறி வருகிறார். திமுக ஆட்சிக் காலத்தைப் போல் டெண்டர் இல்லை. தற்போது இ டெண்டர் விடப்படுகிறது.திமுக ஆட்சிக் காலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் 200 கோடி என அறிவித்து விட்டு 425 கோடி அறிவித்தனர். திமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட டெண்டர்களில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுகவின் குற்றச்சாட்டுக்கு செக் வைத்துள்ளார்.