Categories
தேசிய செய்திகள்

ரூ.220 கோடி புதிய சட்டசபை கட்டிடம்…. அமித்ஷா அடிக்கல்…..!!!!

கடந்த 2008 காங்கிரஸ் ஆட்சியில் ரங்கசாமி முதல்வராக இருந்தபோது தட்டாஞ்சாவடியில் தலைமை  செயலகத்துடன் கூடிய சட்டசபை வளாகம் கட்ட திட்டமிட்டார். இதற்காக  தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே உள்ள இடத்தை  தேர்ந்தெடுத்து திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி அமைச்சரவை  இத்திட்டத்திற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

புதிய சட்டசபை கட்டுமான பணிகள் தொடர்பாக  சபாநாயகர் ஏம்பலம் செல்வம்  நேற்று தட்டாஞ்சாவடியில்  புதிய கட்டிடம் அமையவுள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் கட்டிட வடிவமைப்பு குறித்த ஆலோசனை  கூட்டம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் பொதுப்பணித்துறை அமைச்சர்  லட்சுமிநாராயணன் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்திற்குபின் சபாநாயகர் கூறுகையில், புதுச்சேரியில் ரூ.220 கோடியில் புதிதாக  கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த சட்டசபை வளாகத்தின் வடிவமைப்புகள் குறித்து  ஆலோசிக்கப்பட்டது. செப்டம்பர் 9ம்தேதி அளவில் புதிய சட்டசபை  கட்டிடத்திற்கான பூமிபூஜை நடைபெற வாய்ப்புள்ளது என்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |