Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரூ 231 கோடியில்… கடலூர் to மடப்பட்டு இருவழிச்சாலை… அதிகாரிகள் ஆய்வு…!!

ரூ 231 கோடியில் கடலூர் – மடப்பட்டு இடையே இரு வழி சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகில் கடலூர் – மடப்பட்டு இடையே இரு வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி ரூ 231 கோடியே  77 லட்சம் செலவில் 36 1/2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் திருவாமூரில் மலட்டாறு உயர்மட்ட மேம்பால பணி, பண்ருட்டி புறவழிச்சாலை அமைக்கும் பணியை கண்காணிப்பு பொறியாளர் செல்வதுரை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவருடன் கோட்ட பொறியாளர் சுந்தரி, உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சந்தியா, இளநிலை உதவி பொறியாளர் சங்கரநாராயணன், அலுவலர்கள் ஆகியோர் ஆய்வின் போது உடன் இருந்தார்கள். தற்சமயம் கடலூர் – மடப்பட்டு இடையிலான பயணிக்கும் நேரம் 90 நிமிடம் ஆக இருக்கிறது. ஆனால் இரு வழி சாலை பணி முடிந்து செயல்பாட்டிற்கு வந்தால் பயணிக்கும் நேரம் 60 நிமிடம் ஆக குறையும்.

Categories

Tech |