தமிழக அரசு சார்பில் இன்று 18 நிறுவனங்களோடு முதல்வர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் புதிதாக கையெழுத்திட்டுள்ளார். தமிழகம் வர இருக்கும் புதிய 18 நிறுவனங்களின் மூலமாக சுமார் 26 ஆயிரத்து 508 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற இருக்கிறது. இதில் எரிவாயு, இணையவழிக் கல்வி, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு 18 நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ளது.
ஏற்கனவே புரிந்துணர்வு செய்யப்பட்ட ஐந்து நிறுவனங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெறுகிறது. மொத்தமாக இன்றைய தினத்தில் 26 ஆயிரத்து 650 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 24 ஆயிரத்து 528 கோடி மதிப்பில் 18 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமும், 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றுள்ளது.