Categories
சினிமா தமிழ் சினிமா

ரூ. 25 கோடியைத் தொட்ட சிவகார்த்திகேயன்… வெளியான தகவல்…!!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தனது புதிய படத்திற்கு 25 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த அவர் தற்போது தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இவரின் திரைப்படம் மிகவும் பிடிக்கும்.

இவரின் வளர்ச்சி படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகின்றது. தற்போது அவரின் சம்பளம் ரூபாய் 25 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனத் தயாரிப்பில், தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்தப்படத்திற்கு அவருடைய சம்பளம் 25 கோடியாம்.

Categories

Tech |