Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ.25 லட்சம் கேட்டு வியாபாரிக்கு மிரட்டல்…. கையும் களவுமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

சென்னை கொளத்தூர் அய்யப்பா நகரில் வசித்து வருபவர் நேரு (48). இவர் விவசாய பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்துவருகிறார். இவரை மர்மநபர் ஒருவர் செல்போனில் பேசி மிரட்டி வந்தார். அந்நபர் கூறியதாவது “தன்னை ஜி.எஸ்.டி. அதிகாரி என கூறிக்கொண்டார். மேலும் நேருவின் நிறுவனம் ரூபாய் 4 கோடி வரிஏய்ப்பு செய்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை மேற்கொண்டால் நிறுவனத்தை இழுத்து மூடவேண்டியதுதான். ஆகவே இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க ரூபாய் 25 லட்சம் கொடுக்க வேண்டும்” என்று போனில் பேசிய நபர் கூறினார். எனினும் நேருவுக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் போனில் பேசிய நபர் உண்மையிலேயே ஜி.எஸ்.டி. அதிகாரியாக இருக்குமா என நேரு தெரிந்துகொள்ள விரும்பினார். சைதாப்பேட்டை வணிக வரி அலுவலகத்திற்கு நேரில் ஆஜராக வேண்டும் எனவும் அந்த நபர் நேருவிடம் தெரிவித்தார். அதன்படி அலுவலகத்திற்கு சென்று குறிப்பிட்ட நபரிடம் செல்போனில் பேசியபோது “வணிகவரி அலுவலகம் அருகிலுள்ள கோயிலுக்கு வாருங்கள்” என்று குறிப்பிட்டார். அவர் கூறியபடி கோயிலுக்கு சென்று பார்த்தபோது போனில் பேசிய நபர் வணிகவரி அலுவலகத்தின் காரில் பந்தாவாக உட்கார்ந்திருந்தார்.

அவர் நேருவிடம் ரூபாய் 25 லட்சம் கொண்டு வந்திருக்கிறீர்களா என கேட்டார். அவ்வளவு தொகை என்னிடமில்லை என நேரு பதிலளித்தார். ரூபாய் 10 லட்சமாவது கொடுக்க வேண்டும் என அந்த நபர் கூறினார். அதன்பின் அந்நபர் ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு தியாகராய நகர், வடக்கு உஸ்மான் சாலை பகுதிக்கு வாருங்கள் என கூறிவிட்டு காரில் ஏறி சென்று விட்டார். குறிப்பிட்ட நபர் உண்மையான ஜி.எஸ்.டி. அதிகாரி கிடையாது என்பதை நேரு புரிந்துகொண்டார். சென்ற 25-ம் தேதி வடக்கு உஸ்மான் சாலை பகுதிக்கு நேரு சென்றார். முன்கூட்டியே பாண்டி பஜார் காவல்துறையினருக்கு இது தொடர்பாக தகவல் கொடுத்தார்.

அதனை தொடர்ந்து பணம் கேட்ட நபரை கையும், களவுமாக பிடிக்க திட்டமிடப்பட்டது. இதனால் பாண்டி பஜார் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணன் தயார் நிலையில் இருந்தார். ரூபாய் 10 லட்சம் கேட்ட நபர் வந்தவுடன் அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். அவர் ஜி.எஸ்.டி. அதிகாரி இல்லை என தெரியவந்தது. அவர் வணிகவரி அலுவலகத்தில் கார் டிரைவராக பணிபுரிபவர் எனவும் அவரது பெயர் வேலு (46) எனவும் தியாகராயநகர் லாலா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கண்டறியப்பட்டது. அவர் ஜிஎஸ்டி அதிகாரி போன்று நடித்து வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்து, மோசடியில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. அதன்பின் வேலுவை காவல்துறையினர் கைது செய்யப்பட்டார்.

Categories

Tech |