சிறுமியின் புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் அவதூறாக பதிவிட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ராதாசிங் (32 வயது). இவரும் அதே பகுதியை சேர்ந்த ஆண் ஒருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். அதன்பின் சில பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதனால் பழிவாங்கும் விதமாக ராதாசிங் அந்த நபரின் மகளுடைய புகைப்படத்தை மொபைல் நம்பருடன் சேர்த்து ரூ. 2500 என்ற விலையையும் குறிப்பிட்டு அவதூராக முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி அச்சிறுமியின் வாட்ஸ் அப்பிற்கு அவதூறான மெசேஜ்களையும் அனுப்பியுள்ளார். மேலும் அந்தப் புகைப்படத்தை பார்த்து பலரும் அச்சிறுமியின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தவறான உறவுக்கு அழைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இது குறித்து அவரின் பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்ட பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் அகமதாபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் சிறுமியின் புகைப்படத்தை பதிவு செய்த ராதா சிங் என்ற இளம்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது