Categories
மாநில செய்திகள்

ரூ.2500 டோக்கன் பணி பாதியில் நிறுத்தம்… அடிதடி…!!!

மதுரையில் பொங்கல் பரிசு தொகையை பெறுவதற்கு மக்கள் இடையே அடிதடி ஏற்பட்டதால் டோக்கன் தரும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின்போது இலவச வேஷ்டி சேலை யுடன், பொங்கல் பரிசு தொகுப்பு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த வருடம் கூடுதல் பரிசு தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் தமிழகத்தில் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மதுரை ஜம்பூரா புறம் மார்க்கெட் பகுதியில் பொங்கல் பரிசு தொகை பெற மக்களிடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று டோக்கனை கொடுக்க அரசு உத்தரவிட்ட நிலையில், தெருமுனையில் நின்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் கொடுத்ததால் மக்கள் இடையே அடிதடி ஏற்பட்டுள்ளது. மேலும் டோக்கனை பறிக்க முயன்றதால் ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் தரும் பணியை பாதிலேயே நிறுத்தி விட்டுச் சென்றனர். அதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |