Categories
மாநில செய்திகள்

ரூ.2500 வாங்காவிட்டால் திரும்ப கிடைக்குமா?… தமிழக அரசு விளக்கம்…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் பெறாவிட்டால் ஜனவரி 13-ஆம் தேதி சென்று பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த வருடம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக இலவச வேட்டி சேலையுடன் 2500 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. வருகின்ற டிசம்பர் 30-ஆம் தேதி டோக்கன் வினியோகம் நிறுத்தப்படும். அதன்பிறகு ஜனவரி 4ஆம் தேதி முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும்.

அவ்வாறு குறிப்பிட்ட நாட்களில் பொங்கல் பரிசு வாங்காதவர்கள் ஜனவரி 13-ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம். மேலும் டோக்கனில் குறிப்பிடும் நாளில் மட்டுமே ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து ஒரு மீட்டர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம் வினியோகம் குறித்த புகார்கள் இருந்தால் சம்மந்தப்பட்ட தாசில்தார் அலைபேசியில் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |