லாரி டிரைவரிடம் ரூபாய் 2 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியில் வசித்து வருபவர் லாரி டிரைவர் கோவிந்தன்(35). இவருக்கு கடந்த மாதம் பொதுத்துறை வங்கியில் இருந்து ரூ 25 லட்சம் வரை கடன் வாங்கலாம் என்றும், அதற்கு சான்றிதழ் பெறுவதற்கு முதல் தவணையாக ரூபாய் 5000 கொடுக்கவேண்டும் என்று மெசேஜ் வந்துள்ளது. இதை உண்மை என்று நம்பிய கோவிந்தன் முதல் தவணையாக ரூ 5000 செலுத்தி உள்ளார்.
அதன் பின்னர் வந்த மெசேஜ் மூலம் 22 தவணையாக ரூ 2,50,850 யை ஆன்லைன் மூலம் செலுத்தினார். ஆனால் அவருக்கு எந்தவித கடன் தொகையும் வரவில்லை. இதுதொடர்பாக மெசேஜ் வந்த அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது அந்த போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவிந்தன் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து பணத்தை அபேஸ் செய்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.