தீவிரவாத இளைஞனால் பள்ளி ஆசிரியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸை சேர்ந்த ஆசிரியரான சாமுவேல் 18 வயது நிரம்பிய அப்துல்லா என்பவரால் கழுத்து துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தீவிரவாதி அப்துல்லாவுக்கு பள்ளியில் உள்ள மாணவர்கள் உதவியதும் அதற்கு 300 யூரோக்கள்(இந்திய மதிப்பில் ரூ.26,124) கூலியாக பெற்றதும் தெரியவந்தது.
தீவிரவாத இளைஞன் சிறுவர்களிடம் ஆசிரியரை சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியதால் தான் சிறுவர்கள் அப்துல்லாவிடம் ஆசிரியரை காட்டிக் கொடுத்துள்ளனர். தற்போது ஆசிரியரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஏழு பேரில் 15, 14 வயதுடைய சிறுவர்களும் பிரச்சினையை எதிர் கொள்ள உள்ளனர்.