Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரூ.3 கோடியுடன் தலைமறைவான மளிகைக்கடைக்காரர்…. கதறும் பொதுமக்கள்…. மாவட்ட ஆட்சியரிடம் மனு….!!

ரூ.3 கோடியை ஏமாற்றி மளிகை கடைக்காரர் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அங்கு ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்துள்ளனர். அதில் திருப்பூர் தாராபுரம் பகுதியை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் செரங்கோட்டில் மளிகை கடை வைத்திருக்கும் குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 18 வருடங்களாக தீபாவளி பலகார சீட்டு, ஏழ சீட்டு நடத்தி வந்தனர். அதில் ஏராளமான பொதுமக்கள் சீட்டு பணம் செலுத்தி வந்துள்ளனர்.

அதன்படி அவர்கள் தீபாவளி பண்டிகைகளுக்கு முன்பு பலகாரம் சீட்டு ரூ.5,200 செலுத்தினர். மேலும் ஏலச்சீட்டு மொத்தம் 217 பேர் 1 கோடியே 3 லட்சத்தை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் குமார் அவருடைய குடும்பத்தினர் கடந்த 19-ஆம் தேதி திடீரென தலைமறைவாகி விட்டனர். அவர்களுடைய செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ரூ.2 கோடியே 90 லட்சத்தை ஏமாற்றி விட்டனர். எனவே அவர்களை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |