Categories
உலக செய்திகள்

ரூ. 3.7 லட்சம் கோடி… தவறுதலாக அனுப்பிய வங்கி… இருப்பினும் சோகத்தில் இளைஞர்….!!!

அமெரிக்காவில் உள்ள வங்கி ஒன்று ஒருவரின் கணக்கிற்கு தவறுதலாக 3.7 லட்சம் கோடி தொகையை அனுப்பியிருந்த பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் பல வங்கிகள் உள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வங்கி சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். சில சமயம் வங்கிகளின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வேறு ஒருவருக்கு அனுப்ப வேண்டிய பணம், மற்றொருவருக்கு தவறுதலாக சென்றிருக்கும். பின்னர் அந்த தொகையை குறிப்பிட்ட நபர் புகார் அளித்த பிறகு, அந்தத் தொகை திரும்ப பெறப்படும். ஆனால் இங்கு வங்கியே ஒருவருக்கு பணத்தை அனுப்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் கொஞ்சம் பணம் அல்ல. கிட்டத்தட்ட 3.7 லட்சம் கோடி பணம் ஆகும். அமெரிக்காவில் உள்ள வங்கி ஒன்று டேரன் ஜேம்ஸ் என்பவரது வங்கி கணக்கிற்கு ரூபாய் 50 பில்லியன் டாலர்களை தவறுதலாக அனுப்பியுள்ளது. குறிப்பிட்ட நபர் அந்த செல்போனில் உள்ள செய்தியை பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த பணம் திருப்பி எடுக்கப்பட்டது. இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “மெசேஜில் வந்த தொகையின் எண்களை நான் எண்ணிக் கொண்டிருக்கும் போதே பணம் போய்விட்டது. அத்தனை ஹீரோக்களை பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தற்போது என் வங்கி கணக்கில் வெறும் 110 டாலர் மட்டுமே உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |