Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ரூ.30 கோடி நிலமோசடி வழக்கு: மாட்டி கொண்ட 5 அரசு அதிகாரிகள்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

காஞ்சீபுரம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயு ள்ள வடகால், பால்நல்லூர் ஆகிய கிராமங்களில் அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட 16 ஏக்கர் நிலத்தை சென்ற சில வருடங்களாக தனியார் நிறுவனத்தினர் வீட்டு மனை பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்து வந்தனர். அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என புகார் பெறப்பட்டதால் காஞ்சீபுரம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட நிலத்தின் மதிப்பு ரூபாய்.30 கோடி என கூறப்படுகிறது.

இந்நிலையில் அரசு நிலத்தை ஏமாற்றி வீட்டு மனை பிரிவுகளாக விற்பனை செய்வதற்கு உடந்தையாகயிருந்த காஞ்சீபுரம் இணை சார்பதிவாளர் ராஜதுரை (40), இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் (54), அலுவலக உதவியாளர் பெனடின் (54), காஞ்சீபுரம் நில எடுப்பு தாசில்தார் எழில் வளவன் (50), ஸ்ரீபெரும்புதூர் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் பார்த்தசாரதி (33) போன்றோரை காஞ்சீபுரம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்தனர்.

அதன்பின் அவர்கள் மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் விசாரணை மேற்கொண்ட நீதிபதி வருகிற 12-ஆம் தேதி வரையிலும் அவர்களை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர். நிலமோசடி வழக்கில் 5 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |