Categories
தேசிய செய்திகள்

ரூ.300 க்கு லாட்டரி வாங்குங்க…. ரூ.12 கோடி பரிசு அள்ளுங்க…. கேரளா அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால் கேரளாவில் லாட்டரி சீட்டு விற்கும் நடைமுறை உள்ளது. இந்நிலையில் கேரள அரசு சார்பாக ஓணம் சிறப்பு லாட்டரி பரிசு ரூபாய் 12 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா அரசு சார்பாக பண்டிகை தினத்தன்று சிறப்பு நாட்களில் லாட்டரி பரிசுகள் அறிவிக்கப்படும்.

இதனையடுத்து ஆகஸ்ட் 12-ஆம் தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்க இருக்கிறது .இந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிறப்பு லாட்டரியின் முதல் பரிசாக 12 கோடியும், இரண்டாம் பரிசாக ஆறு பேருக்கு தலா ரூ.1 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லாட்டரி சீட்டின் விலை ரூபாய் 300 ஆகும்.

Categories

Tech |