Categories
மாநில செய்திகள்

ரூ.3000 உதவித்தொகை கொடுங்க… தமிழக அரசுக்கு புதிய அழுத்தம்…. போராட்ட எச்சரிக்கை …!!

மாற்றுத்திறனாளிகளுக்கு 3000 உதவி தொகை, தனியார் துறையில் 5% வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில்  குடியேறும் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களை சந்தித்த, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில தலைவர் திருமதி ஜான்சிராணி, தமிழகத்திலுள்ள பதிமூன்று லட்சத்து 35 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து ஆண்டுக்கணக்கில் காத்திருப்பதாக தெரிவித்தார்.

Categories

Tech |