Categories
தேசிய செய்திகள்

ரூ.3000 தராததால் தந்தையை 6 துண்டுகளாக வெட்டிய மகன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் தனது சொந்த மகனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. முன்னாள் கடற்படை வீரரான உஜ்வால் சக்கர போர்த்தி தனது மனைவி மற்றும் மகனை தொடர்ந்து துன்புறுத்தி வைத்துள்ளார். அவரின் மகன் பாலிடெக்னிக் படித்து வரும் நிலையில் சம்பவத்தன்று தனது தேர்வுக்காக அப்பாவிடம் பணம் கேட்டுள்ளார். அதனை தர மறுத்ததால் சக்கர போர்த்தி அவரது மகனால் தள்ளிவிடப்பட்டார். அப்போது அருகில் உள்ள நாற்காலியின் போது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அதன் பிறகு தந்தையின் கழுத்தை நெறித்து மகன் கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட தந்தையின் உடலை கழிப்பறையில் வைத்து ஆறு துண்டுகளாக வெட்டி உள்ளார். பிறகு தந்தையின் உடல் பாகங்களை பிளாஸ்டிக் பையில் வைத்து வெவ்வேறு இடங்களில் புடைத்துள்ளார். இந்த கொலைக்கு அவரது தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தந்தையை காணவில்லை என மகன் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் சக்கர போர்த்தி மனைவி மற்றும் மகனை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |