Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ரூ.30,000 இருந்தால் வங்கியில் கடன் வாங்கி தருகிறேன்”…… டெய்லரை ஏமாற்றிய பெண்…. போலீசார் அதிரடி….!!!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகில் உள்ள தெத்துப்பட்டியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவி கரியமாலா. இவர் தையல் தொழிலாளி. இவர் புதிதாக எந்திரங்கள் வாங்கி தையல் தொழிலை மேம்படுத்தற்கு போதிய பணம் இல்லாதால் வங்கியில் கடன் வாங்க முடிவு செய்தார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் ராஜதானிகோட்டை பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டியம்மாள் என்பவரின் அறிமுகம் கிடைத்தது.

அப்போது முத்துப்பாண்டியம்மாள் வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கித் தருவதாக கூறி கரியமாலாவிடம் ரூ.30,000 வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் முத்துப்பாண்டியம்மாள் வங்கியில் கடன் வாங்கி கொடுக்காததோடு, ரூ.30,000 திரும்ப கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த கரியமாலா திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து முத்துபாண்டியம்மாளை கைது செய்தனர்.

Categories

Tech |