ரிக்சா ஓட்டுனருக்கு ரூ 3 கோடி செலுத்துமாறு வருமானவரி துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பகல்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சிங்.. இவர் அதே பகுதியில் ரிக்ஷா வண்டி ஓட்டி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 3 கோடி ரூபாய் வரை வரி பாக்கி இருப்பதாக அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதாப்சிங் உடனே காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து போலீசார் விசாரித்ததில் பிரதாப் சிங் பான் அட்டை மூலம் யாரோ ஒருவர் ஜிஎஸ்டி எண்ணை பெற்று தொழில் செய்து வருவது தெரியவந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.