சென்னை மாவட்டத்தில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது வேட்புமனு தாக்கலை செய்து வருகின்றனர். இதைதொடர்ந்து பல கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்கள் தொகுதிக்கு அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என கூறியுள்ளது.
அதன்படி சென்னையில் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்கு அதிகபட்சமாக ரூ.30,80,000 மட்டுமே செலவு செய்ய வேண்டும் என கூறியுள்ளது. செலவின கணக்குகளை அதற்குரிய அதிகாரியிடம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.