2023-2027-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ரூ.32 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஏலம் விடப்படும் என்று பிசிசிஐ நிர்வாகி ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2008-ஆம் ஆண்டில் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை சோனி நிறுவனம் ரூ. 8,200 கோடிக்கு ஏலம் எடுத்தது.
அதேபோல் 2018-ஆம் ஆண்டில் ஸ்டார் நிறுவனம் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ரூ.16,347.5 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது ஆகும். தற்போது இந்த உரிமையை பெற மூன்று பெரிய நிறுவனங்கள் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.