Categories
அரசியல் தேசிய செய்திகள்

ரூ.3,408,00,00,000…. டெண்டர் விட்ட பாஜக அரசு… ராகுல் காந்தி கிடுக்குப்பிடி கேள்வி …!!

கொரோனாவால் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில்,  கட்டிடங்கள் கட்டுவதற்கே மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சாடியுள்ளார் .

கொரோனா 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், ஆக்சிஜன் தடுப்பூசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு 3408 கோடி ரூபாய் மதிப்பிலான செயலகங்களை கட்ட டெண்டர் விட்டுள்ளது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தனது ரவிட்டார் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கொரோனா நெருக்கடி நிலவுவதை குறிப்பிட்டுள்ளார். பரிசோதனைகள், தடுப்பூசிகள், ஆக்சிஜன்,  தீவிர சிகிச்சை பிரிவுகள் போன்றவை தட்டுப்பாடு நிலவுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சூழலில் மத்திய அரசு எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்றும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |