லதா மங்கேஷ்கரின் சொத்து யாருக்கு சேரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய சினிமா திரையுலகில் தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்த லதா மங்கேஷ்கர் தனது 92-வது வயதில் காலமானார். இவரது மறைவு தேசம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. மேலும் கொடி அரைக்கம்பத்தில் பறந்தது. அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இவரின் அஸ்தி கோதாவரி ஆற்றில் கரைக்கப்பட்டது.
மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து வைத்திருந்த இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதனால் அவரது சொத்துக்கள் அனைத்தும் தற்போது யாருக்கு சேரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மும்பையில் ஒரு பெரிய வீடு மற்றும் பல விலை உயர்ந்த சொகுசு கார்கள், நகைகள், உடைகள், கேமரா என அவரது சொத்து மதிப்பு தற்போது 360 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.