கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் விமலா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் பவார். இவர் ஓய்வு பெற்ற இன்ஜினியர் ஆவார். இவர் .38,000 மாத ஒய்வுதியம் பெற்றுவந்தார். பவார் இறந்த பிறகு அவரது மனைவியான விமலாவுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு பவார் வங்கி கணக்கு கனரா வங்கியுடன் கடந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டது. இதனால் தவறுதலாக விமலாவுக்கு ரூ.96,998 ஓய்வூதியம் வந்தது. இதனை விமலாவும் கண்டு கொள்ளவில்லை. சமீபத்தில் விமலாவுக்கு வழங்க வேண்டிய தொகையில் வழக்கத்தை விட கூடுதலாக ரூ.6.40 லட்சம் வழங்கியிருப்பதே வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து ஒரே நேரத்தில் பிடித்த செய்வதாக வங்கி அறிவித்தது. இந்நிலையில் வங்கியின் இந்த நடவடிக்கை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் விமலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாகப்பிரசான முன்னிலையில் நடைபெற்றது. வழக்கின் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது, விமலாவுக்கு கூடுதல் தொகை கிடைத்தது பற்றி அறிந்திருக்கவில்லை. எனவே ஒரே நேரத்தில் அவரிடம் இருந்து ரூ.6.40 லட்சத்தை பிடித்தம் செய்தால் வாழ்க்கை நடத்த முடியாது. எனவே ரூ.6.40 லட்சத்தை மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு வங்கி பிடித்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.