Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.3,82,89,00,000 கொடுத்தாங்க…. OK நாங்க அப்படியே செஞ்சுருவோம்…. தமிழக அரசு விளக்கம் …!!

கொரோனா நிவாரண பணிக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூபாய் 382 கோடியே 89 லட்சம் வந்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு பணிக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நன்கொடை வழங்கப்பட்ட விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை என்ற அடிப்படையில் வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், வெளி மாநிலங்களில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் இதுவரை இணையதளத்தில் அரசு வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் வைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் பல்வேறு விவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக பொதுமக்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நன்கொடை நிதி வழங்கி இருக்கிறார்கள். இணையதளம் வாயிலாக பணம் செலுத்தியவர்கள்  விவரம் வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அரசுப் பணியாளர்கள் குறைந்தளவில் வருவதன் காரணமாக இந்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட முடியாத ஒரு சூழல் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி வரை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 382 கோடியே 89 லட்சம் ரூபாய் அளவிற்கு நிதி வந்திருப்பதாக வந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பான விவரங்களும்  இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்பதையும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |